ரயில்வே பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
தெற்கு ரயில்வே பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
தெற்கு ரயில்வே அலுவலக பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து துறை ரயில்வே அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் தற்போது சுமார் 90 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் ரயில்வே பணிகளின் போது தமிழ் மற்றும் ஆங்கிலம் முக்கிய மொழிகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அலுவலகச் செயல்பாடுகளில் இந்தி பயன்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக டிக்கெட் கவுன்ட்டர்கள், வங்கிகள், பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் இடங்கள் ஆகியவற்றில் இந்தி அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலக ஆவணங்கள், உள் அறிக்கைகள், தினசரி செயல்பாடுகள் போன்றவற்றிலும் இந்தி இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயின் அனைத்து பிரிவுகளும் தங்களின் பணி செயல்பாடுகளில் இந்தி மொழியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் சேவைகளில் ஆங்கிலத்துடன், இந்தியும் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது..
