இறுதி கட்ட விசாரணை- நேரில் ஆஜரான ஓபிஎஸ் தம்பி

பட்டியலின கோவில் பூசாரியை த*கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தேனி பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த கோயிலில் பூசாரி நாகமுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு த*கொலை செய்து கொண்டார். இவரை த*கொலைக்கு தூண்டியதாக அப்போதைய கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகரசபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கூடுதல் வாதங்களை அரசு தரப்பில் முன் வைப்பதற்காக விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com