ஆபரேஷன் சின்னத்தம்பி 2.௦ வெற்றி - லாரியில் ஏற்றப்பட்டது யானை

காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

சின்னத்தம்பி யானையை காயமின்றி பிடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த‌தை தொடர்ந்து நேற்று முதல் யானையை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் முயற்சித்து வந்தனர். இன்று காலை வனத்துறையினரும், மயக்க ஊசிகளுடன் மருத்துவர் குழுவினரும், களம் இறங்கினர். நான்கு மயக்க ஊசிகள் செலுத்தியும் சற்றும் அசராமல், வாழை தோட்டத்திற்குள் புகுந்த சின்னத்தம்பி யானை, வனத்துறையினரையும் கும்கி யானைகளையும் திணறடித்த‌து. பின்னர் சிறிது சிறிதாக மயக்க நிலையை அடைந்த சின்னத்தம்பி யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் லாவகமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர், சின்னத்தம்பி ஏறுவதற்காக அமைக்கப்பட்ட மணல் மேடு பகுதியில் லாரி நிறுத்தப்பட்டது. கும்கி யானை உதவியுடன் சின்னத்தம்பி யானையை லாரியில் ஏற்றும் பணியில் ஏராளமான வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் லாரியில் ஏற மறுத்தது சின்னத்தம்பி.

சின்னத்தம்பியை கும்கியானை தமது தந்தத்தால் குத்தி குத்தி லாரியில் ஏற்றியது. இந்த சம்பவம் அங்கு சுற்று நின்று வேடிக்கை பார்த்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com