15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த உறவினர்கள் - நடுங்கிய உடல்.. கேட்கவே பதறவைக்கும் சம்பவம்

x

ஊட்டியில் 15 வயது சிறுமியை சித்தப்பா உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சிறுமிக்கு படிப்பு சரியாக வராததால், தனது சித்தி வீட்டில் தங்கி படிக்க கடந்த ஜனவரி 24ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தப்பாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, திருவிழாவுக்காக பாட்டி ஊருக்கு சென்ற சிறுமியை 25 வயது இளைஞர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதே போல், பக்கத்து வீட்டை சேர்ந்த 85 வயது முதியவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவே, பள்ளி தோழிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் மூலம் "1098" என்ற சைல்ட் லைன் எண்ணில் புகார் அளிக்கப்பட்டு, சித்தப்பா மற்றும் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்