Ooty | Wildfire | ஒரு வாரமாக பற்றியெரியும் காட்டுத்தீ | களத்தில் இறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
ஊட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ - களத்தில் இறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் பார்சன்ஸ் வேலி வனப்பகுதியில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர் களத்தில் இறங்கி உள்ளது... நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட பார்சன்ஸ் வேலி, பைக்காரா வன பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு வார காலமாக எரிந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக வனத்துறையின் கோரிக்கை அடுத்து இன்று விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணிகாக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பார்சன்ஸ் வேலி மற்றும் எமரால்டு அணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆனது ஊற்றப்பட்ட நிலையில் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து எரிந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 2000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் ஆகி உள்ளது.
