

கொடைக்கானலில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பெய்த சாரல் மழை
கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் மழை காரணமாக புதிய அணையின் நீர்மட்டம் 18 அடியை கடந்தது. ஒரே வாரத்தில் இதன் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வத்தலக்குண்டு சாலையில் மரம் ஒன்று பெயர்ந்து விழுந்ததால் அங்கு சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.