ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை
Published on
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் ஐந்தாயிரம் மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு சுற்றுலா தளங்களை ரசித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com