

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 30 ரூபாய் என்று இருந்த கட்டணம் தற்போது 40 ரூபாயாகவும், சிறியவர்களுக்கு 15 ரூபாய் என்று இருந்த கட்டணம் தற்போது 20 ரூபாயாகவும் வசூல் செய்யபடுகின்றது. ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தேயிலை பூங்கா, கட்டேரி பூங்கா ஆகிய இடங்களிலும் கட்டணம் உயர்த்த பட போவதாக தோட்டக் கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.