அடம் பிடித்து வாங்கிய புதிய பைக்கில்.. அசுர வேகத்தில் வந்த மகனுக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி வீடியோ

x

உதகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பாரதி நகரைச் சேர்ந்த நித்தின் என்பவர், தனது பெற்றோரிடம் அடம் பிடித்து வாங்கிய புதிய பைக்கில், தமிழகம் சாலையில் அதிவேகமாக சென்றபோது, சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார். அவரை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், தலைக்கவசம் அணிந்து இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறாமல் அவர் வாகனத்தை இயக்கியது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்