"எங்களுக்கு மட்டும்தான் தண்ணி பிரச்சினை..3 நாள் ஆகுது வந்து.."-திடீர் சாலைமறியல்

x

குடிநீர் லாரி வரவில்லை - காவலர்களின் குடும்பத்தினர் திடீர் சாலைமறியல்

சென்னை கிரீம்ஸ் சாலையில், குடிநீர் லாரி வரவில்லை என காவலர் குடியிருப்பில் உள்ள பெண்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கீஸ் கார்டன் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் செய்த இந்த சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு, போலீசார் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள் சிலர், 5-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் வந்த நிலையில், தற்போது 3 லாரிகள் மட்டும் வருவதாக கடும் அவதிப்படுவதாக குற்றம்சாட்டை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்