"மாதத்திற்கு 40 லிட்டர் மட்டுமே" - "தாய்ப்பால் தானம் செய்ய போதிய விழிப்புணர்வு இல்லை"
"மாதத்திற்கு 40 லிட்டர் மட்டுமே" - "தாய்ப்பால் தானம் செய்ய போதிய விழிப்புணர்வு இல்லை" - மருத்துவர் கருத்து
கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர், தாய்ப்பால் தானம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என தெரிவித்தார். தாய்ப்பால் தானம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அரசு மருத்துவர் ராஜேஷ், தங்கள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் குறைவான எடை கொண்ட குழந்தைகள், நோய்வாய்பட்ட குழந்தைகள், தாயாருக்கு நோய் உள்ளிட்ட சில காரணங்களால் தாயிடமிருந்து தனிமைபடுத்தப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு தானம் செய்யப்பட்ட தாய்ப்பால் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால் தங்கள் மருத்துவமனையில் மாதம் ஒன்றிற்கு 40 லிட்டர் மட்டுமே தாய்ப்பால் கிடைப்பதாகவும், இது குறித்து போதிய விழிப்புணர்வு வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story