சாக்லேட் சிரப்பில் செத்த எலி... வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

சாக்லேட் சிரப்பில் செத்த எலி... வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
Published on

ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோ மூலம் ஹெர்ஷிஸ் சாக்லேட் சிரப்பை ஒரு பெண்மணி ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். புதிதாக வாங்கப்பட்ட அந்த சிரப்பை பயன்படுத்த தொடங்கியது முதல், சிரப்பில் இருந்து முடி முடியாக வந்துள்ளது. இதனைக் கண்டதும் பதறிப்போன பெண், பாட்டிலை முழுவதுமாக திறந்த போது அதிர்ந்து போனார். பாட்டிலில் உள்ள சிரப்பை கீழே ஊற்றி பார்த்த போது அதில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது. இதை அறியாமல் சாக்லேட் சிரப்பை சாப்பிட்டு 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அப்பெண்மணி, இதுகுறித்து புகார் தெரிவிக்க முற்பட்டும் ஹெர்ஷிஸ் சிரப் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் இல்லை எனக்கூறிய நிலையில், அவர் பதிவிட்ட வீடியோவிற்கு கீழ் மன்னிப்பு கோரி ஹெர்ஷிஸ் நிறுவனம் கமெண்ட் செய்ததுடன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com