Online Transaction ``ஆன்லைன் மூலம் அக்கவுண்டில் விழுந்த ரூ.2.5 கோடி பணம்’’ கமுக்கமாக இருந்தவர் கைது
கடலூரில் ரவுடி வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பண்ருட்டி அருகே பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக்குமார் வங்கி கணக்கிற்கு கடந்த 2024-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.2 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. இதில் சந்தேகமடைந்து வங்கி மேலாளர் அளித்த புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், அது அசோக் குமாரின் நண்பர் கலைச்செல்வன் ஷேர் மார்கெட் நிறுவனத்தில் மோசடி செய்த பணம் என தெரியவந்தது இதனையடுத்து, ரவுடி அசோக் குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கலைச்செல்வன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
