இணையவழி சூதாட்டம்... 3 மாதம் சிறை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இணையவழி சூதாட்டத் தடை மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன் படி, இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை அல்லது, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டத்தில், பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை இந்த சட்டம் தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டங்கள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மின்னணு சாதனங்கள் உட்பட எந்த ஒரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்யக்கூடாது என இந்த சட்டம் குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 1 ஆண்டு வரை சிறை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தொடர்ந்து செய்தால் 3 ஆண்டுவரை சிறை, 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் தொடர்பாக பதாகைகள், போஸ்டர்கள், ஆட்டோக்களில் விளம்பரங்கள், இணையதள செயலியில் விளம்பரம் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com