ஆன்-லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சகோதரர்கள் கடைசியில் தம்பியும் அண்ணனும் விபரீதம் முடிவு

ஆன்-லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சகோதரர்கள் கடைசியில் தம்பியும் அண்ணனும் விபரீதம் முடிவு
Published on

ஆன்-லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சகோதரர்கள்

கடைசியில் தம்பியும் அண்ணனும் விபரீதம் முடிவு

கடன் சுமையால் தம்பி தற்கொலை செய்து கொண்ட மூன்றே மாதங்களில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம், திரு.வி.நகரை சேர்ந்த சகோதரர்கள் மகேஷ்வரன் மற்றும் சிங்கார வேலு. பட்டப்படிப்பு முடித்த இருவரும், ஷேர் மார்க்கெட், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கந்துவட்டி ஆகியவைகள் மூலம் சுமார் 50 லட்சம் வரையிலான பணத்தை கடன் வாங்கி இழந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி ஆளான சிங்காரவேல், சில மாதங்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் சிங்காரவேலனின் சகோதரர் மகேஷ்வரனை நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ்வரன் கடந்த 9 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 10 நாள்களாக தொடர் சிகிச்சையில் இருந்த மகேஷ்வரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததிருக்கும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com