"கள்ளக்குறிச்சி பள்ளியில் புதன் முதல் ஆன்லைன் வகுப்புகள்"

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, காதலியை காதலன் சுத்தியால் தாக்கிய சம்பவத்தில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
x

விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர், பெத்தநாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25ம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் ரம்யா கிருஷ்ணனை கார்மாங்குடி வெள்ளாற்று அருகே, ஸ்ரீதர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதருக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த சுத்தியை எடுத்து, ரம்யாகிருஷ்ணனின் தலையில் ஸ்ரீதர் சரமாரியாக தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் ரம்யா கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், ரம்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், ரம்யா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் மீது, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்