ஆன்லைன் வர்த்தகம் : தமிழகத்தில் வணிகர்கள் போராட்டம் தொடர்கிறது

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர் சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் வர்த்தகம் : தமிழகத்தில் வணிகர்கள் போராட்டம் தொடர்கிறது
Published on

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணை தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊட்டி

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் அதற்கு தடைவிதிக்க கூறி, ஊட்டியில், வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com