வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை; சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன் - மத்திய அரசு அனுமதி

வெங்காய விலையை குறைப்பதற்கும், தாராளமாக மக்களுக்கு கிடைக்க செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை; சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன் - மத்திய அரசு அனுமதி
Published on

இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெங்காய விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி, வரும் டிசம்பர் 31 வரை அதிகபட்சமாக மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன்னும், சில்லரை வர்த்தகர்கள் 2 மெட்ரிக் டன்னும், வெங்காயம் கையிருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும் அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com