தொடரும் பட்டாசு வெடிவிபத்துகள்.. சிவகாசியில் உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு

x

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் இரண்டு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், அடிக்கடி பட்டாசு வெடி விபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி 32.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும்பணி தொடங்கி விரைவில் நிறைவு பெற உள்ளதாக கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 14 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்