#BREAKING || தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ONGC-க்கு அனுமதி
கடந்த 03.01.2024 அன்று மேற்கண்ட இடங்களில் ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறு அமைக்க சர்வதேச அழைப்பானை விடுக்கப்பட்டது. முதலில் 29.02.2024 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்னர் காலகெடு நீடிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 21, 2024 அன்று விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மேற்கண்ட பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா மற்றும் ஓ என் ஜி சி நிறுவனங்கள் இடையே போட்டி உள்ளதாக மத்திய எரிசக்தி இயக்குனரகம் அறிவித்திருந்தது.
என்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என்று மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில்....
கடந்த வாரம் டெல்லியில் ஏலம் இறுதி செய்யப்பட்டு தமிழகத்தின் நான்கு வட்டாரங்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓ என் ஜி சி நிறுவனத்திற்கு அனுமதி வழஙகியுள்ளதாக ஆர்கஸ் மீடியா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
