கிச்சனுக்கு சென்று வருவதற்குள் பிணமாக கிடந்த 1 வயது மகள்.. சென்னையில் பயங்கரம்
தண்ணீர் வாளியில் மூழ்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சோகம்
சென்னை வானகரத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வத்தமன் - சவுமியா தம்பதி.இவர்களது மூத்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மாத்திரை போட்டு தூங்க வைத்துள்ளனர்.தாய் சௌமியா மற்றொரு குழந்தையான தக்ஷனாவை டிவி பார்க்க வைத்துவிட்டு சமைக்க சமையல் அறைக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் குழந்தை குரல் கேட்காததால் சந்தேகம் அடைந்து வெளியே வந்து பார்த்தபோது தக்ஷனா இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.அங்கும் இங்கும் தேடியும் குழந்தை கிடைக்காததால், சந்தேகத்துடன் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து கிடப்பதை பார்த்து பேரதிர்ச்சியில் கூச்சலிட்டார்.அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.இதனால் அஸ்வத்தமன் - சவுமியா குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
