கடலூர்||பண்ருட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து
பண்ருட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் சாலையில் கத்தியால் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
ஆட்டோ ஓட்டுநர்களான பிரபு, நந்தகோபால கிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.... அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சாலையில் நின்று சண்டையிட்டனர்...
ஒருவரை ஒருவர் மாறி, மாறி கத்தியால் குத்தியதால் இருவருக்கும் ரத்தம் கொட்டியது...
நீண்ட நேரம் போராட்சி சண்டையை நிறுத்திய பொதுமக்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....
இந்தநிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
