ஒருவர் மீது,ஒருவர் சாய்ந்து..பிரான்ஸ் தம்பதியின் டான்ஸ்..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற நடன நிகழ்ச்சியை காண வந்த பிரான்ஸ் தம்பதி, எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய காட்சி வைரலாகி வருகிறது. கருங்குழி அம்மன் கோயிலில் ஆவணி மாத விழா நடைபெற்ற நிலையில், நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிரான்ஸ் தம்பதி, நடன நிகழ்ச்சியில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடலுக்கு, மீனவ மக்களுடன் இணைந்து நடனமாடிய காட்சி வைரலாகி வருகிறது.
Next Story
