முதன்முறை திரௌபதியை கலங்கிய கண்களுடன் வழிபாடு | வென்ற தலைமுறை போராட்டம்...

x

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். 2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஒரு தரப்பு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எதிர்ப்பு தெரிவித்த மக்களை சமரசம் செய்தனர். மேல்பாதி கிராமத்தில் பதற்றமும் பரபரப்பும் நிலவும் நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.18) சாமி தரிசனம் செய்ய ஒரு தரப்பு முடிவு செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்