ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு மரணம் | வெளியான ஷாக் ரிப்போர்ட்

x

சாலை விபத்து - ஒரு மணிநேரத்தில் 20 பேர் பலி

நாட்டில் சாலை விபத்தில் ஒரு மணிநேரத்துக்குத் தலா 20 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 2023-இல் நடைபெற்ற சாலை விபத்து தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

2023-இல் நாடு முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரத்து 583 சாலை விபத்துகள் பதிவானதாகவும், அதில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 825 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு மணி நேரத்தில் தலா 55 விபத்துகள் பதிவாவதாகவும், அதில் 20 பேர் தங்களது இன்னுயிரை இழப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

அதிலும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு மரணம் பதிவாவதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

விபத்துக்கு சீட் பெல்ட் அணியாதது முக்கிய காரணம் என கூறிய சாலை போக்குவரத்து அமைச்சகம், இதனால் 16,025 பேர் இறந்ததாக சுட்டிக்காட்டுகிறது.

விபத்தில் அதிகபட்சமாக 44.8 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் தான் சிக்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023-இல் ஹெல்மெட் அணியாததால் மட்டும் 54 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அளவிலான விபத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் அதிகபட்சமாக 67,213 விபத்துகளும்,

உத்தர பிரதேசத்தில் 23,652 இறப்புகளும் பதிவானதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்