மான் வேட்டையில் ஒருவர் கைது - 5 மான்கள், காட்டுப்பன்றி பறிமுதல்
மான் வேட்டையில் ஒருவர் கைது - 5 மான்கள், காட்டுப்பன்றி பறிமுதல்
வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது 3 பேர் தப்பி ஓட்டம் : 5 மான்கள், ஒரு காட்டுப்பன்றி, 75 கிலோ இறைச்சி, 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 கார்கள், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சில்லப்பள்ளி அருகே உள்ள அமானிக்கரே வனப்பகுதியில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை நகரப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக கர்நாடக மாநில வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் வனதுறையினர் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பன்னார்கட்டா அருகே நைஸ் ரோடு டோல்கேட் அருகே வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது வனத்துறையினரிடம் வேட்டை கும்பலை சேர்ந்த குப்பல்லா பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர் மட்டும் சிக்கி உள்ளார். முக்கிய குற்றவாளியான பால்ராஜ், பீமப்பா மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரும் தப்பி சென்றுள்ளனர். பிடிபட்ட பிரதாப்பிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியபோது வனப்பகுதியில் 9 மான்கள் மற்றும் ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றை அவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதில் 4 மான்கள் மற்றும் ஒரு காட்டுப்பன்றியை அவர்கள் இறைச்சியாக்கி உள்ளனர்.
பிடிபட்டவரிடமிருந்து 75 கிலோ இறைச்சி, 5 மான்கள் உடல், மற்றும் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இரண்டு கார்கள் ஒரு பைக் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான பால்ராஜ் உள்ளிட்ட 3 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
