தண்ணீர் பக்கெட்டில் குழந்தை கொடூர சாவு.. அசால்ட்டாக இருக்க வேணாம் தாய்மார்களே!

x

தென்காசி அருகே தண்ணீர் பக்கெட்டில் விழுந்து மூச்சு திணறி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்குடி பகுதியில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த பக்கெட்டில் தலைகீழாக விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர், குழந்தையை செங்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்