ஒரே போன் காலில் ஒன்றரை லட்சம் அபேஸ் - சென்னையில் பகீர் சம்பவம்

x

சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கற்பக ரமேஷிற்கு கடந்த ஜூனில் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் வங்கி அதிகாரி எனவும், கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்தித் தருவதாகவும் கூறி ஓடிபி எண்ணைக் கேட்டுள்ளார்... இதை அப்படியே நம்பிய ரமேஷ் மர்ம நபரிடம் ஓடிபி எண்ணைத் தெரிவித்த நிலையில், அடுத்த நிமிடமே அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது... குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்து போன ரமேஷ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்... தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டவர்களின் பரிமாற்றப்பட்ட வங்கி கணக்கை சோதனை செய்ததில் கானத்தூரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் ஆம்பூரைச் சேர்ந்த முகமது உசேன் ஆகியோரின் வங்கி கணக்குகள் என தெரிய வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளி டெல்லியில் இருப்பதாக கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்