அடுத்தடுத்து மோதிக்கொண்ட பேருந்து, கார் & பைக் | மரத்தில் மோதிய பேருந்து
தென்காசி கடையநல்லூர் அருகே அரசு பேருந்து மற்றும் கார், பைக் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். சிங்கிலிபட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திற்கு, எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்டது. இதில் எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பேருந்தை திருப்பிய போது அருகிலுள்ள புளியமரத்தின் மீது மோதி பேருந்து விபத்தானது. இதில் பேருந்தில் பயணித்த 23 பயணிகளும் மற்றும் எதிரே பைக்கில் வந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
