Onam | களைகட்டிய ஓணம்... மாஸ் காட்டிய மாணவர்கள்... இறங்கி ஆடி மிரட்டி விட்ட கலெக்டர்
களைகட்டிய ஓணம்... மாஸ் காட்டிய மாணவர்கள்... இறங்கி ஆடி மிரட்டி விட்ட கலெக்டர்
களைகட்டிய ஓணம்... மாஸ் காட்டிய மாணவர்கள்... இறங்கி ஆடி மிரட்டி விட்ட கலெக்டர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எக்ஸல் கல்வி நிறுவனங்களில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையைச் செண்டை மேள முழக்கத்துடன் மிக விமரிசையாகக் கொண்டாடினர். மாணவர்கள் பாரம்பரிய உடைகளில் வந்து, வண்ணமயமான அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ந்தனர். மேலும், மகாபலி வேடமணிந்த மாணவருடன் புகைப்படம் எடுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுடன் வளாகமே திருவிழாக் கோலம் பூண்டது.
