தனியார் கல்லூரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை ஆட்டம்... பாட்டம்... என கொண்டாடிய மாணவ, மாணவிகள்

x

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை குமரி மாவட்ட நட்டாலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் புழுதி பறக்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொண்டாட்டங்கள் ஏற்கனவே களைகட்ட துவங்கி நடைபெற்று வரும் நிலையில் குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓணக்கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து அந்தப் பூ கோலமிட்டு நடனம் திருவாதிரை நடனம்,உறியடி, வடம் இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி புழுதி பறக்க குத்தாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்