OMR Road Traffic | Chennai | திணறும் OMR சாலை - 5 கிலோ மீட்டருக்கு ஆமை போல் நகரும் வாகனங்கள்
#Chennai #OMR #OMRRoad #Traffic #ThanthiTV OMR Road Traffic | Chennai | திணறும் OMR சாலை - 5 கிலோ மீட்டருக்கு ஆமை போல் நகரும் வாகனங்கள் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து துரைப்பாக்கம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையான ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் குறுக்கலாக்கப்பட்டுள்ளன. மேலும், சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகனங்கள் சீராக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
