ஆம்னி பேருந்துகளில் செக்கிங்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆம்னி பேருந்துகளில் பொருள் வைப்பு அறையில் இருந்த பெட்டிகளை உடைத்து பணம் ஏதும் மறைத்து கொண்டு வரப்படுகிறதா? என தீவிரமாக சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள், பார்சல் பெட்டிகளை உடைத்து பணம், பரிசுப் பொருட்கள் மறைத்து கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com