பால் பாக்கெட்டுகளுடன் வந்த ஆம்னி வேன்.. பற்றி எரிந்த பரபரப்பு காட்சி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மூளமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் வயது 40 என்பவர் நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் விக்ரம் என்பவருக்கு சொந்தமான தனியார் பால் ஏஜென்சியிலிருந்து பால் பாக்கெட்களை மாருதி ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு நன்னிலத்தில் இருந்து கூத்தாநல்லூர் வரை உள்ள கடைகளுக்கு பால்பாக்கெட் டெலிவரி செய்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை ரமேஷ் குமார் ஆம்னி வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் பால் பாக்கெட் டெலிவரி செய்துவிட்டு நன்னிலம் செல்வதற்காக திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது விளமல் ஆயுதப்படை மைதானம் அருகில் ஆம்னி வேனில் பின்பக்கத்தில் புகை வருவதாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஆம்னி வேன் தீ பிடிக்க தொடங்கியது. இதனை பார்த்த ரமேஷ்குமார் உடனடியாக இறங்கிய நிலையில் ஆம்னி வேன் எரிந்து முற்றிலுமாக சேதம் அடைத்தது.மேலும் அருகில் உள்ள பனை மரத்திலும் தீ பற்றிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் திருவாரூர் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதும் ஆம்னி வேன் கருகி பால் பாக்கெட்டுகள் அனைத்தும் எரிந்து போயிருந்தன.ஆம்னி வேனில் தீ பற்றியவுடன் துரிதமாக செயல்பட்டு ஒட்டுநர் இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
