ஆர்டிஒ அலுவலகத்தில் ஆம்னி பஸ் திருட்டு

திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்ஸை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆர்டிஒ அலுவலகத்தில் ஆம்னி பஸ் திருட்டு
Published on

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதி பெறாமல் ஓட்டப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை கடந்த டிசம்பர் மாதம் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார், திருடனையும், ஆம்னி பஸ்சையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு கைது செய்துள்ளனர். தூத்துக்குடி வேம்பார் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சுயம்பு மற்றும் அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் ஆம்னி பஸ் வாங்கி அனுமதி இல்லாமல் ஓட்டி வந்த நிலையில் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால்

பறிமுதல் செய்யப்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை இவர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com