Omni Bus Accident | கிரிவலத்திற்கு செல்லும் வழியில் 36 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்

x

ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது-லேசான காயங்களுடன் தப்பிய பயணிகள்

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்வதற்காக 36 பயணிகள் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த கோனிமேடு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். பயணிகள் மற்றும் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்