வீட்டில் பெண்ணுக்கு கருக்கலைப்பு.. செவிலியரை சுற்றி வளைத்து பிடித்த அதிகாரி
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பாலினம் அறிந்து கருக்கலைப்பில் ஈடுபடும் கும்பல் குறித்து
மாவட்ட ஆட்சியர் சதீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர், ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டி ஹவுசிங் போர்டில் இருக்கும் ஒரு வீட்டில் இளம் பெண்ணுக்கு கரு கலைப்பு செய்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர் சுகன்யாவை கையும் களவுமாக பிடித்தனர். உடன் இருந்த 2 பேர் தப்பியோடினர். தொடர்ந்து கரு கலைப்பில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
