ஓமலூர் : ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் - சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

ஓமலூர் அருகே ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓமலூர் : ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் - சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்
Published on
ஓமலூர் அருகே ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓமலூர் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், ரயில் வரும் வரை காத்திருக்க முடியாமல், அருகில் உள்ள பாதை வழியாக, தண்டவாளத்தை கடக்க முற்பட்டார். அப்போது அவரது இருசக்கர வாகனம், தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டது. இதனைக் கவனித்து, சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
X

Thanthi TV
www.thanthitv.com