"எட்டுத்திக்கும் கேட்ட ஓம் சக்தி கோஷம் " - முள்படுக்கையில் ஆக்ரோஷமாக சாமி ஆடிய பெண்
சிவகங்கையில், முள்படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி அருள்வாக்கு கூறிய பெண் சாமியாரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். திருப்புவனம் தாலுகா அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார். 47-ம் ஆண்டு ஜப்பான் மண்டல பூஜை விழாவை யொட்டி, சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் நின்று கொண்டும், நடனமாடியும் படுத்துக்கொண்டும், ஆடியபடியும் ஆக்ரோசமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
