Chennai | வீட்டை விற்ற பின்பு மீண்டும் பணம் கேட்டு மிரட்டும் பழைய ஓனர்?சென்னையில் பரபரப்பு சம்பவம்

வீட்டை விற்ற பின்பு மீண்டும் பணம் கேட்டு மிரட்டும் பழைய ஓனர்?சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னை செங்குன்றம் பகுதியில் வீட்டை முறையாக விற்று முழு தொகையையும் பெற்றுக்கொண்ட பிறகும், மேலும் 30 லட்சம் ரூபாய் கேட்டு வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்ச்செல்வி என்பவருக்கு சொந்தமான வீட்டை லோகேஸ்வரன் கடந்த ஆண்டு வங்கிக் கடன் மூலம் வாங்கி, முறையாகப் பதிவு செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் 30 லட்சம் ரூபாய் கேட்டு தமிழ்ச்செல்வி தரப்பினர் தகராறில் ஈடுபட்டதாகவும், குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் சுமார் 20 பேருடன் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், காவல்துறை அதிகாரிகளே தமிழ்ச்செல்வி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, 30 லட்சம் கொடுக்காவிட்டால் வீட்டை காலி செய்ய முடியாது என மிரட்டியதாகவும் லோகேஸ்வரன் குடும்பத்தினர் மாதவரம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்....

X

Thanthi TV
www.thanthitv.com