வளர்ப்பு நாயை கட்டிவைத்து அடித்த முதியவர்

x

ஓசூர் அருகே கோழி மற்றும் ஆடுகளை கடித்த வளர்ப்பு நாயை உரிமையாளர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுக்கோட்டை கிராமத்தில் ஒரு முதியவர் தனது கோழி மற்றும் ஆடுகளை, தான் வளர்த்த நாயே கடித்ததால், அதை கட்டிவைத்து தாக்கினார். இந்த வீடியோ பரவிய நிலையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் அந்த நாயை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். நாயை தாக்கிய முதியவர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்