மனைவி, மகனை எரித்துக் கொன்ற முதியவர்

x

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் சகரியா. 60 வயதான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மெர்சியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சில தினங்களுக்கு முன்பு, சகரியாவின் மூத்த மகன் வென்றிக்கு, திருமணம் நடந்திருக்கிறது. இதில் சகரியாவுக்கு உடன்பாடு இல்லாததால், திருமணத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. மேலும், மனைவி மெர்சியுடன் சகரியா தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்ட சகரியா, மனைவி மற்றும் சண்டையை தடுக்க வந்த இளைய மகன் ஹார்லி வினோ மீது, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்த நிலையில், தன்மீதும் தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் 70 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள சகரியா, சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே மகனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தை வெறிச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்