OLA எடுத்த அதிர்ச்சி முடிவு? பணியாளர்கள் தலையில் பேரிடி
OLA எடுத்த அதிர்ச்சி முடிவு? பணியாளர்கள் தலையில் பேரிடி
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆயிரத்து 400 பணியாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் மார்க்கெட்டில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு, 5 விழுக்காடு குறைந்து, 54 ரூபாய்க்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 6 மாதத்தில் 52 விழுக்காடு சரிந்துள்ளது. 6 மாதத்தில் இரண்டாவது முறையாக பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளதால், பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டு 500 தொழிலாளர்களை நீக்கியிருந்தது. தற்போது ஆயிரத்து 400 பேர் வரை நீக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
Next Story
