`OLA-வில் வேலை' - கோடிக்கணக்கில் மோசடி - வெளியான கும்மாங்குத்து வீடியோ

x

போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டி பகுதியில் உள்ள பர்கூர் சிப்காட் வளாகத்தில், ஓலா இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. தர்மபுரியை மையமாகக் கொண்டு இயங்கும் தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வரும் பாஸ்கர் என்பவர், ஓலா நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராமல், சம்பந்தப்பட்டவர்களின் எண்களை பாஸ்கர் பிளாக் செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, வேறொரு செல்போன் எண்ணிலிருந்து பாஸ்கரை தொடர்புகொண்ட பாதிக்கப்பட்ட நபர், ஓலாவில் வேலை வாங்கித் தருமாறு கேட்க, அப்போது பாஸ்கர் கேட்டபடி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜிபேயில் அனுப்பியுள்ளார். மீதிப் பணத்தை நேரில் வழங்குவதாக பாதிக்கப்பட்ட நபர் கூற, அதனை நம்பிய பாஸ்கர் அவர்களை, ஓலைப்பட்டியில் உள்ள தேநீர் கடைக்கு வரச் சொல்லியுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட நபர்கள் அங்கு ஒன்றுகூடி வரவே, அதனை சற்றும் எதிர்பார்க்காத பாஸ்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். பின்னர் அவரை மடக்கிப் பிடித்து பாதிக்கப்பட்டவர்கள் தாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்