`அடேங்கப்பா..ஒரு ஆளு உயரத்திற்கு மீனா' - வலையில் சிக்கிய ராட்சத மீன்கள்
நீர்த்தேக்கத்தில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மீன்கள்
கோவை சிறுமுகை அடுத்த பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீனவர் வலையில், தலா 20 கிலோவிற்கும் மேல் எடையுள்ள ராட்சத மீன்கள் சிக்கியதால், மீன்பிடித்த இளைஞர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். சிறுமுகை அடுத்துள்ள J.J. நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பூபதி என்பவர் வலை போட்டு மீன் பிடித்தார். அதில், ஏராளமான ராட்சத மீன்கள் சிக்கின. இவற்றின் மொத்தம் எடையானது, 260 கிலோ எனக் கூறப்படுகிறது. ஒரே நாளில் பல ராட்சத மீன்களைப் பிடித்த மகிழ்ச்சியில், மீன்களை அடுக்கி அதன் நடுவே படுத்தபடி, பூபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Next Story