எக்குத்தப்பாக மாட்டி கொண்டு கம்பி எண்ணும் போர்மேன் மற்றும் AE

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மின் இணைப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் மற்றும் போர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். படியூர் அருகே மீனாட்சி வலசை பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் புதிதாக கட்டிய கடைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த நிலையில், அவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவிக்கவே, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்கள் கொடுத்த போது, உதவி பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் போர்மேன் நந்த கோபால் இருவரும் கையும் களவுமாக சிக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்