கூலித் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாகி விரித்த வலையில் சிக்கிய அலுவலர்
அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் ரூபாய் 2500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார். திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளைய கிராம நிர்வாக அலுவலரான ரமேஷ் என்பவர், தனது நிலத்தை சர்வே செய்து, பட்டா கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி கார்த்திகேயனிடம் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டு, மூன்று முறை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார். பின்னர், 2500 ரூபாய் கொடுப்பதாக கூறிய கார்த்திகேயன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற ரமேஷை கையும் கலவுமாக பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
