கோவை கடைகளில் ரூ.10,000 லஞ்சம் கேட்டு மிரட்டிய அதிகாரி - வெளியான அடாவடி அதிர்ச்சி வீடியோ

x

கோவை அருகே மளிகை கடைக்காரரை மிரட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லஞ்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியான சக்திவேல், உணவு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கும், உரிமம் வழங்குவதற்கும் கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜயன் என்பவரது கடைக்கு சென்ற சக்திவேல், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், அழுகிய காய்கறிகளை விற்பனை செய்ததாக கூறி, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை தனது ஜி-பே.க்கு அனுப்ப வேண்டுமென வற்புறுத்தியதாகதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வியாபாரிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அதிகாரி சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்