Vellore | ஆவிகளுக்கு படையலிட்டு வீட்டிற்கு அழைக்கும் மக்கள் - வேலூரில் வினோதம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே ஆவிகளுக்கு படையலிட்டு வீட்டிற்கு அழைக்கும் அமானுஷ்ய நிகழ்ச்சி நடைபெற்றது. பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள குப்சூர் மலை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து படையலிட்டு விருந்து வைக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி
ஆவிகளுக்கு இனிப்பு, காரம் போன்ற பலகாரங்களை படையலிட்டு சீர் வரிசை உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆவிகளை அழைக்கின்றனர். அப்போது பல பேர் ஆவி வந்து ஆடினர். அப்படி ஒருவர் ஆடும்போது தலையில் அடிப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஆடினார், இதனை வியப்புடனும் பயத்துடனும் மக்கள் பார்த்தனர்.
Next Story
