Observation Home | கண்ணாடி துண்டுகளை விழுங்கிய 3 சிறுவர்கள்.. பூதாகரமாக வெடிக்கும் சம்பவம்

கண்ணாடி துண்டுகளை விழுங்கிய 3 சிறார்கள் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில், ஊழியர்களைத் தாக்கிவிட்டு 12 சிறார்கள் தப்பியோடிய நிலையில், கண்ணாடி துண்டுகளை விழுங்கிய மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்... இந்த அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது... இதில் கண்ணாடி துண்டை விழுங்கியதால் தீவிர காயம் அடைந்த ஒரு சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com